Thursday, November 26, 2009

Mobile Phone Provider Changing

MAALAI MALAR, சென்னை 21-11-2009

செல்போன் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து
வருகிறது. தகவல் தொடர்பு துறையில் அரசு நிறுவனம், பி.எஸ்.என்.எல். தவிர
தனியார் நிறுவனங்கள் ஏர்டெல், ரிலையன்ஸ், வோடாபோன், ஏர்செல் போன்ற
நிறுவனங்கள் உள்ளன.

ஒரு நிறுவனத்தில் செல்போன் சந்தாதாரராக உள்ள ஒருவர் அதில் இருந்து
விலகிதான் விரும்பும் வேறு நிறுவனத்துக்கு மாறி போக வேண்டும் என்றால்
அந்த எண்ணை ரத்து செய்தவிட்டு அதன் பிறகு அந்த நிறுவனத்தில் புதிய எண்
பெறவேண்டும். இந்த முறை தற்போது நடைமுறையில் உள்ளது.

ஆனால் வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பும் எந்த செல் நிறுவனத்திலும்
சேர்ந்து பயன்பெற விரும்பினால் அதற்கு தடை விதிக்க கூடாது. அவர்கள்
ஏற்கனவே வைத்துள்ள போன் எண்ணையே பயன்படுத்தியவாறு வேறு நிறுவனத்துக்கு
மாறிக் கொள்ளலாம் என மத்திய தகவல் தொடர்பு ஆணையம் (டிராய்)
அறிவித்துள்ளது.

எந்த மொபைல் போன் ஆபரேட்டர்களிடமும் மாறிக்கொள்ளலாம். இதற்கு ரூ.19
மட்டும் கட்டணம் நிர்ணயித்துள்ளது. ஒரு வாடிக்கையாளர் தான் பயன்படுத்தும்
அதே செல்போன் எண்ணை வேறு நிறுவனத்துக்கு மாறினாலும் பயன்படுத்தும் வசதி
2010-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அறிமுகம் செய்யப்படுகிறது.

No comments:

Post a Comment